இந்தோனேசியாவில் இன்று 1,681 புதிய நோயாளிகள் அடையாளம்

இந்தோனேசியாவில் இன்று 1,681 புதிய நோயாளிகள் அடையாளம்

இந்தோனேசியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை 1,681 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 75,699 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று 71 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,606 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சீனாவிற்கு வெளியே தென்கிழக்கு ஆசிய நாடொன்றில் பதிவான அதிக எண்ணிக்கையிலான மரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.