நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்துக்களில் இரு பெண்கள் உட்பட மூவர் பலி

நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்துக்களில் இரு பெண்கள் உட்பட மூவர் பலி

நேற்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் பெண்கள் இருவர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் வவுனியா - மதவச்சி வீதியில் 171 ஆம் கிலோ மீட்டர் கட்டைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இரட்டைபெரிய குளம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் குருணாகல் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 48 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையை கடக்க முற்பட்ட பெண் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை எந்தேரமுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 71 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதையையில் நடந்து சென்ற பெண் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.