கோதுமை மா விலை அதிகரிப்படமாட்டாது!

கோதுமை மா விலை அதிகரிப்படமாட்டாது!

கோதுமை மா இறக்குமதியாளர்களுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தையையடுத்து, கோதுமை மா விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, கோதுமை மா விலையை அதிகரிப்பதில்லை என இறக்குமதியாளர்கள் உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.