நாட்டில் பரவும் புதிய கொவிட் திரிபுகள் தொடர்பில் நாளை அறிக்கை
நாட்டில் பரவலடைந்து வரும் புதிய கொரோனா வைரஸ் திரிபுகள் தொடர்பில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பரிசோதனை அறிக்கை நாளைய தினம் வெளியிடப்படவுள்ளது.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த பரிசோதனைகளை இன்று மாலைக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் டெல்டா கொரோனா வைரஸ் திரிபின் 3 பிறழ்வுகள் பரவலடைந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன அண்மையில் தெரிவித்திருந்தார்.
S.A 222 V, S.A 701 S மற்றும் S.A 1078 S ஆகிய டெல்டா வைரஸ் திரிபின் 3 பிறழ்வுகளே கண்டறியப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் அது தொடர்பில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் பரிசோதனைகளை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : ஒருவாரத்துக்கு நாட்டை முடக்குமாறு ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை!