இறக்குமதி பால்மாவுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை முழுமையாக நீக்க அனுமதி!
இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளை முழுமையாக நீக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
சந்தையில் பால்மாவூக்கு ஓரளவு தட்டுப்பாடு உள்ளது.
விலை அதிகரிப்பு தொடர்பான பிரச்சினையே இதற்கு பிரதான காரணமாகும்.
இந்த நிலையில், இறக்குமதி பால்மாவுக்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளை முழுமையாக நீக்க நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.