குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் பலி!
யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புங்குடுதீவு, 10-ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
இவர் புங்குடுதீவு காட்டுப் பகுதிக்கு நேற்று முன்தினம் (29) பனை வெட்டுவதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது கருக்குளவி தாக்கியதில் (கொட்டியதில்) காயமடைந்த இவரை, அவரது மகன் புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
அவரது உடற்கூற்று பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
-யாழ். நிருபர் கஜிந்தன்-