விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

உள்ளூர் சேதன உர உற்பத்தியாளர்களுக்குப் பூர்த்தி செய்ய முடியாத 2021/2022 பெரும் போகத்திற்குத் தேவையான உரத்தை போட்டித்தன்மையான பெறுகை முறையைப் பின்பற்றி இறக்குமதி செய்வதற்காக 31.05.2021 அன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனிக்கும் தேவையான உரத் தொகையை விநியோகிப்பதற்காக சர்வதேசப் போட்டி விலைமனுக் கோரப்பட்டுள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த பெறுகையை வழங்குவதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.