நாளொன்றில் நேற்று அதிகளவானோருக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாளொன்றில் நேற்று அதிகளவானோருக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில் நாளொன்றில் நேற்றைய தினம், அதிகளவானோருக்கு கொவிட்-19 இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒளடத உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, 311,102 பேருக்கு நேற்று இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முதலாம் தடுப்பூசி அடங்கலாக, நேற்றைய தினம் மொத்தமாக 490,805 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.