ஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக்புக் சீரிஸ் வெளியீட்டு விவரம்
ஆப்பிள் நிறுவனம் சமீபத்திய சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட லேப்டாப் மாடல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என தெரிவித்து இருந்தது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது 13.3 இன்ச் மேக்புக் ப்ரோ மற்றும் மேக்புக் ஏர் மாடல்களை புத்தம் புதிய ஆப்பிள் சிலிகான் பிராசஸர்களுடன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
புதிய 13.3 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் தற்போதைய மாடலை போன்றே காட்சியளிக்கும் என்றும் இதனுள் ஏஆர்எம் சார்ந்த ஆப்பிள் சிலிகான் சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதே போன்று மேக்புக் ஏர் மாடலிலும் ஆப்பிள் சிலிகான் பிராசஸர் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனம் 14.1 இன்ச் மாடலை அப்டேட் செய்து 13.3 இன்ச் வேரியண்ட்டிற்கு மாற்றாக அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இதில் புதிய மினி எல்இடி டிஸ்ப்ளே வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மினி எல்இடி டிஸ்ப்ளே 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலிலும் வழங்கப்படலாம் என தெரிகிறது.
இரண்டு மாடல்களிலும் ஆப்பிள் ஏஆர்எம் சார்ந்த ஆப்பிள் சிலிகான் பிராசஸர் வழங்கப்படும் என்றும் இவை அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.