வாட்ஸ்அப்பின் புதிய அம்சம்: ஸ்டோரேஜ் இனி அதிகமாகவே ஆகாதாம்

வாட்ஸ்அப்பின் புதிய அம்சம்: ஸ்டோரேஜ் இனி அதிகமாகவே ஆகாதாம்

மக்களின் தகவல் தொடர்புக்கான மிக முக்கியமான செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. மற்ற சமூக வலைதளங்களைப் போல் அல்லாமல் பெர்சனலாக நமக்கு வேண்டப்பட்டவர்களிடம் சாட் செய்துகொள்ளலாம். இப்படி பல்வேறு வகையில் மற்றவையிடமிருந்து வாட்ஸ்அப் வித்தியாசப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்களை தன்னகத்தில் கொண்டிருக்கிறது. பயனர்களின் அனுபவத்தைக் கூட்டும் வகையில் அவ்வப்போது புதுப்புது அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொடுக்கும்.

அந்த வகையில் மூன்று புதிய அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் டெஸ்ட் செய்துகொண்டிருந்தது. ஒரே வாட்ஸ்அப் கணக்கை வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்துவது, நாம் அனுப்பும் மெசெஜ்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் மறைய வைப்பது (disappearing mode), நாம் அனுப்பும் போட்டோ, வீடியோக்களை எதிர்முனையில் இருப்பவர்கள் ஒருமுறை மட்டுமே பார்க்கும் (View Once) அம்சம் ஆகிய மூன்று புதிய அம்சங்களைச் சோதித்து வந்தது. இந்த மூன்றில் தற்போது View Once அம்சத்தை ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராமில் ஒருவருக்கு போட்டோ அல்லது வீடியோ அனுப்பினால் அதை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். அதற்குப் பிறகு அந்த ஃபைல் தானாகவே மறைந்துவிடும். அதற்குப் பிறகு மறுமுனையில் இருப்பவர் என்ன செய்தாலும் அதைப் பார்க்க முடியாது. மிக முக்கியமாக நீங்கள் அனுப்பும் போட்டோ அவரின் போன் கேலரியில் சேவ் ஆகாது. சேவ் செய்யவும் முடியாது. இது பயனர்களின் பிரைவசியை பாதுகாக்கிறது. இந்த அம்சத்தைத் தான் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இதை ஸ்க்ரீன் ஷாட் அல்லது ஸ்க்ரீன் ரெக்கார்டர் மூலம் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.

இப்பிரச்சினையை கூடிய விரைவில் வாட்ஸ்அப் சரிசெய்யும் என்று சொல்லப்படுகிறது.இந்தப் புதிய அம்சத்தை நீங்கள் பெற வேண்டுமென்றால் பிளே ஸ்டோரில் வாட்ஸ்அப்பின் புதிய வெர்சனை அப்டேட் செய்தால் போதுமானது. உங்கள் சாட்டிலிருந்து மீடியா ஃபைல்களை அனுப்புவதற்கு முன்பு கேப்ஷன் பார் அருகில் இருக்கும் ‘1’ என்ற ஐகானைத் கிளிக் செய்தால் நீங்கள் அனுப்பும் ஃபைல் View Once ஃபார்மெட்டில் சென்றுவிடும். இல்லையென்றால் பல முறை பார்க்கக் கூடிய வகையில் ஃபைல் சென்றுவிடும் என்பதை மறவாதீர்கள்.