களுவங்கேணி மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டோரில் 114 பேருக்கு கொவிட்

களுவங்கேணி மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டோரில் 114 பேருக்கு கொவிட்

மட்டக்களப்பு - களுவங்கேணி மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டோரில் 114 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில், தொற்றுறுதியானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக செங்கலடி பொது சுகாதார காரியாலயம் தெரிவித்துள்ளது.

முன்னதாக மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையானோருடன் குறித்த ஆலய திருவிழாவினை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

எனினும், அதிக எண்ணிக்கையிலானோர் ஆலய திருவிழாவில் பங்கேற்றதன் காரணமாக இவ்வாறு அதிகளவானோருக்கு கொவிட்19 தொற்றுறுதியானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.