கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட 8 மலையக இளைஞர்கள்
16 ஆயிரம் மில்லி கிராம் கஞ்சா வைத்திருந்த கொட்டக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் 80 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொட்டக்கலை பகுதியைச் சேர்ந்த சுமார் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு கஞ்சாவுடன் கலால் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை கடந்த 06 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்திய போதே இவ்வாறு தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.