உலக நாடுகளுக்கு பாடம் புகட்டிய இந்தியாவுக்கு புகழாரம்!

உலக நாடுகளுக்கு பாடம் புகட்டிய இந்தியாவுக்கு புகழாரம்!

ஸ்திரமான எதிர்காலத்தை உருவாக்குவது எப்படி என இந்தியாவிடமிருந்து உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய உலகளாவிய வார உச்சி மாநாட்டில் காணொலி வழியாக பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே இந்தியாவின் நிலையான வாழ்க்கை முறையை புகழ்ந்துரைத்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

தற்போதைய கொரோனா நெருக்கடியில் இருந்து உலகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதை மக்கள் பார்க்க வேண்டும்.

நிலையான வாழ்க்கை என்பதன் முக்கியத்துவம் பற்றி நான் பிரதமர் மோடியுடன் பேசினேன்.

தன்னை புதுப்பித்துக்கொள்ள முற்படும் போது உலகம் இந்தியாவிடம் இருந்து அபரிகிரகா என்ற பண்டைய யோக ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது.

இந்தியா எப்போதோ இதை புரிந்து கொண்டது. அதன் தத்துவமும் மதிப்புகளும் நிலையான வழியை வலியுறுத்துகின்றன.

அபரிகிரகா யோக கொள்கை வாழ்க்கையின் குறிப்பிட்ட கட்டத்தில் அவசியமானவற்றை மட்டுமே வைத்துக்கொள்ள நம்மை ஊக்குவிக்கிறது. பண்டைக்கால ஞான உதாரணங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும்.

ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் இந்தியாவின் பங்களிப்புக்கான இலட்சியத்தால் நான் எப்போதும் பெரிதும் ஊக்குவிக்கப்படுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.