மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட கண்காணிப்பு!

மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட கண்காணிப்பு!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 151 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,154 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு உட்பட சனநெரிசல் மிக்க நகரங்களில், பொதுமக்கள் முகக்கவசமின்றி பயணிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உரியவாறு முகக்கவசம் அணியாதவர்கள் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், இது குறித்து இன்று(26) முதல் மேல்மாகாணத்தில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.