இணையத்தில் பார்வையாளர்களை வியக்க வைத்த நெருப்பு தோசை.. செய்வது எப்படி? வைரல் வீடியோ

இணையத்தில் பார்வையாளர்களை வியக்க வைத்த நெருப்பு தோசை.. செய்வது எப்படி? வைரல் வீடியோ

வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் 99 வகை தோசை கடைகள் இருக்கிறது. ரோட்டோரமாக இருக்கும் தோசைகளில் 99 வகையான தோசைகள் இங்கு கிடைக்கும்.

இதையடுத்து, ம.பி மாநிலம் இந்தூரில் ஒரு வெரைட்டி தோசை கடை இருக்கிறது. அங்குள்ள ஒருவர் நெருப்பு தோசை போட்டு அசத்தி வருகிறார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவ வருகிறது.

அந்த வீடியோவில், சமையல் கலைஞர் ஒருவர் கரி அடுப்பில் தோசைக்கல்லை போட்டு சமைக்கிறார். முதலில் தோசை மாவை ஊற்றி தேய்த்து, பின்னர் மசாலாவை அந்த தோசையின் மீது ஊற்றுகிறார்.

அதன் பின்னர் அடுப்பு எரியும் பகுதியில் ஒரு பேனை பிடிக்கிறார். அடுப்பிலிருந்து அனல் பொறி பறக்கிறது. சிறிது நேரத்திற்கு பிறகு அடுப்பு நன்றாக எரிந்து கல்லிற்கு மேலநெருப்பு எரிகிறது.

அப்போது, அவர் தோசைக்கு மேலே கிரீம், பாலாடை, ஆகியவற்றை தூவுகிறார். இதை அங்கு சென்றவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.