2 இடுப்பு, 8 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி: பிறந்த சில நிமிடங்களில் நடந்த சோகம்

2 இடுப்பு, 8 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி: பிறந்த சில நிமிடங்களில் நடந்த சோகம்

இந்தியாவில் இரண்டு இடுப்பு மற்றும் 8 கால்களுடன் பிறந்துள்ள அதிசய ஆட்டுக்குட்டி ஒன்றின் புகைப்படம் இணையத்தில் பெரிதும் பார்க்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் மேற்கு வங்கத்தில் வடக்கு பர்கானாஸில் எட்டு கால்கள் மற்றும் இரண்டு இடுப்புகளைக் கொண்ட ஆடு ஒன்று பிறந்துள்ளது.

சரஸ்வதி மொண்டால் என்பவர் வீட்டில் வளர்த்து வந்த ஆடுகளில் ஒன்று இரண்டு குட்டிகளை பெற்றெடுத்தது. அதில் ஒரு ஆட்டுக்குட்டி மட்டும் எட்டு கால்கள் மற்றும் இரண்டு இடுப்புகளுடன் பிறந்துள்ளது.

ஆனால் இந்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளது. இந்த அதிசய ஆட்டுக்குட்டியை பார்க்க கிராம மக்கள் ஆர்வம் காட்டி வந்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள சரஸ்வதி மொண்டால், தமது ஆடுகள் இதற்கு முன்பு இப்படி குட்டிகளை ஈன்றது இல்லை எனவும், இதுவே முதல் முறை எனவும் கூறியுள்ளார்.

மேலும் அந்த ஆட்டுக்குட்டி பிறந்த 5 நிமிடங்களில் இறந்துவிட்டதாகவும் சரஸ்வதி மொண்டால் கூறியுள்ளார்.