
சந்தேகத்துக்குரிய 96 மாதிரிகளில் டெல்டாவா? வேறு திரிபா? பரிசோதனைகள் ஆரம்பம்!
திரிபடைந்த கொரோனா வைரஸ் என சந்தேகிக்கப்படும் 96 மாதிரிகள் குறித்து, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞானவியல் நிறுவகம் பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் சில நாட்களுக்கு அதன் அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, இந்த திரிபடைந்த கொரோனா வைரஸ் மாதிரிகள், ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு கிடைத்துள்ளன.
இந்த கொரோனா வைரஸ், டெல்டா திரிபா? அல்லது வேறு திரிபா என்பது குறித்து உறுதியான தீர்மானம் எதிர்வரும் சில நாட்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளது.