கொரோனா வைரஸ் : இந்தியாவில் ஒரேநாளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவு!

கொரோனா வைரஸ் : இந்தியாவில் ஒரேநாளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவு!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி ஒரே நாளில் 25 ஆயிரத்து 790 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 479 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 4 இலட்சத்து 95 ஆயிரத்து 960 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 2 இலட்சத்து 77 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக சுகாதாரத்துறை மேலும் அறிவித்துள்ளது.

இதேவேளை தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 4ஆயிரத்து 231 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை 65 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளமை குறப்பிடத்தக்கது.