கொரோனா தடுப்பு மருந்து கண்டறியப்படாவிட்டால்! இந்தியாவுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொரோனா தடுப்பு மருந்து கண்டறியப்படாவிட்டால்! இந்தியாவுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டறியப்படாத பட்சத்தில் இந்தியாவில் இதே நிலை நீடித்தால் வரும் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாத இறுதியிலிருந்து ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனதொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது கணிக்கப்பட்டுள்ளது.

சுமார் 475 கோடி மக்கள் வாழும் 84 நாடுகளின் நம்பத்தகுந்த தரவை அடிப்படையாக கொண்டு கொரோனா வைரஸ் பரவலின் தொற்றுநோயியல் மாதிரியை கொண்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தீவிரமான பரிசோதனை, நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை விரைந்து கண்டறிதல் உள்ளிட்ட நடவடிக்கைகளே எதிர்காலத்தில் இந்த நோயை குறைக்க உதவும் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பபட்டுள்ளது.