சீனி மற்றும் பருப்பு இறக்குமதி செய்ய அனுமதி

சீனி மற்றும் பருப்பு இறக்குமதி செய்ய அனுமதி

சிவப்பு பருப்பு மற்றும் வௌ்ளை சீனி ஆகிவற்றை சதொச மற்றும் கூட்டுறவு ஊடாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உள்நாட்டில் அதிக விலைக்கு குறித்த பொருட்களை விற்பனை செய்வதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து சீனி மற்றும் சிவப்பு பருப்பை நேரடியாக இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.