மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடாத்துவதற்கு தீர்மானம் – மஹிந்த

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடாத்துவதற்கு தீர்மானம் – மஹிந்த

பொதுத் தேர்தல்  வெற்றியின் பின்னர்  மாகாண  சபை தேர்தலை நடாத்துவதற்கு  திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மாவனெல்லை பகுதியில்  நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,  “ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று எம்மோடு போட்டியிடுகின்றனர். எதிர்வரும் தேர்தலில் தற்போதையை அரசாங்கம் வெற்றிபெறும் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும் ஆனால்  இவர்களுள் பெரும்பாலானவர்கள் ஆட்சியை கைப்பற்றறுவதற்காக போட்டியிடவில்லை.

அவர்கள் ஐக்கிய  தேசியக் கட்சி தலைமையகமான  சிறிகொத்தவை கைப்பற்றுவதற்காகவே அவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.   அப்படியானால் அவர்கள் நீதிமன்றம் ஊடாக அதனை கைப்பற்றியிருக்கலாம்.

19 ஆவது அரசியலமைப்பின் ஊடாக பல்வேறு சிக்கல்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே  எதிர்வரும் பொதுத் தேர்தல்  வெற்றியின் பின்னர்   உடனடியாக மாகாண  சபை தேர்தலை நடாத்துவதற்கு நாம் எதிர்ப்பார்த்துள்ளோம் என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.