பூவை முகர்ந்ததால் நடந்த விபரீதம்! போதையான பாடகிக்கு அடுத்து நடந்த அதிர்ச்சி... வைரலாகும் காட்சி

பூவை முகர்ந்ததால் நடந்த விபரீதம்! போதையான பாடகிக்கு அடுத்து நடந்த அதிர்ச்சி... வைரலாகும் காட்சி

டிக்டாக்கில் பிரபல பாடகி ஒருவர் டெவில்ஸ் ப்ரீத் பூ என்ற பூவை முகர்ந்து பார்த்ததால் போதையானதாக கூறிய வீடியோ வைரலாகியுள்ளது.

டிக்டாக்கில் பிரபலமான பாடகி ரஃப்பில்லா வேமேன். இவர் பாடல்களை பாடுவது மட்டுமல்ல பாடல்களை எழுதுவதிலும் புகழ்பெற்றவர்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த பூ ஒன்றை எடுத்து இவரும் இவரது நண்பம் மூக்கில் வைத்து முகத்து பார்த்துள்ளனர்.

அந்த பூ மிகவும் விஷத்தன்மை வாய்ந்த பூ. அந்த பூவை குமர்ந்து பார்த்த இவர்களுக்கு சில நொடிகளில் தலைக்கு போதை ஏறியுள்ளது. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இவர்களுக்கே புரியாமல் போனது. இவர்கள் எப்படியோ தங்கள் வீட்டிற்கு வந்து வீட்டிலிருந்து அவர்கள் எப்படியோ சமாளித்து தூங்கியுள்ளனர்.

மறுநாள் காலையில் இதற்கான காரணம் என்ன என யோசித்த போது இவர்கள் இருவரும் இது எப்படி நடந்தது யோசித்த போது அவர்கள் பூவை முகர்ந்து பார்த்தது தான் காரணம் என நினைவிற்கு வந்தது.பின்னர் அந்த பூ குறித்து தேடியபோதுதான் அது போதை தரும் பூ என தெரிந்தது.

இதையடுத்து அவர் டிக்டாக் மூலம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளதால் அந்த வீடியோவை இந்தியாவில் காணமுடியாது. ஆனால் அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் உள்ளது அதை கீழே காணுங்கள்.

ஒரு ஆய்வில் இந்த பூவால் ஆண்டுதோறும் 50ஆயிரம் பேர் வரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருவதாக கூறுகிறது. இனி நீங்களும் தெரியாத பூவை முகர்ந்து பார்க்கவேண்டும் என்றால் கொஞ்சம் யோசனை செய்து கொள்ளுங்கள்.