மீண்டும் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு - அரசாங்கம் நடவடிக்கை

மீண்டும் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு - அரசாங்கம் நடவடிக்கை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் ஒரு இலட்சம் பேருக்கு அரசாங்கத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்பு திட்டத்தை மீண்டும் சப்ரகமுவ மாகாணத்திலும் விரைவில் செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மாகாண சபையின் பிரதான செயலாளர் ரஞ்ஜனி ஜயகொடி தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண சபை கட்டடத்தொகுதியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் திட்டத்தின் கீழ், நாடு பூராகவும் 25 துறைகளை சார்ந்த தொழில் பயிற்சியை பெற்று கொடுத்து அவர்களை அரசாங்க தொழிலில் உள்வாங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மேற்படி வேலைத்திட்டத்தின் மூலம் விவசாயத்துறை மற்றும் கைத்தொழில்துறைக்கு முன்னுரிமை வழங்கப்படும். விசேடமாக சப்ரகமுவ மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் கைத்தொழில்துறைக்கு முன்னுரிமை வழங்குவதற்கு கவனம் செலுத்தப்படும்.

குறிப்பாக சப்ரகமுவ மாகாணத்தில் மாணிக்கக்கல், பால், புடவை உட்பட பல்வேறு கைத்தொழில்துறையில் இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொண்டு அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை மேலும் ஊக்குவிக்க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.