சீனாவிலிருந்து ஸ்ரீலங்காவுக்கு வந்த மர்மப்பொதி : விசாரணைகள் தீவிரம்

சீனாவிலிருந்து ஸ்ரீலங்காவுக்கு வந்த மர்மப்பொதி : விசாரணைகள் தீவிரம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பெயரை பயன்படுத்தி சீனாவில் இருந்து மர்ம பொதியொன்று ஸ்ரீலங்காவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கன் விமான சேவையினூடாக கொண்டு வந்த குறித்த பொதி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் விசேட பணிப்பின் பேரிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, சீனாவின் ஷங்ஹாய் விமான நிலையத்திலிருந்து ஜனாதிபதிக்கு பொதியொன்றை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையுள்ளதாக குறித்த நபர் ஶ்ரீலங்கா விமான சேவைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஷங்காய் விமான நிலையத்தில் ஶ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்களிடம் கையளிக்கப்பட்ட பொதியினை அவர்கள் இலங்கையின் விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர், அதன் பின்னர் பொதியிடல் பிரிவிடம் இந்த பொதி கையளிக்கப்பதுடன் அதன் பின்னர் குறித்த பாதுகாப்பு அதிகாரி இந்த பொதியை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,