சிறைக் கைதிகள் தொடர்பில் ஸ்ரீலங்கா இராணுவ ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட செய்தி
ஸ்ரீலங்காவிலுள்ள சிறைக் கைதிகளில் மொத்தம் 204 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பொலன்னறுவை சிறைச்சாலையிலுள்ள 11 கைதிகளும் பல்லேகல சிறைச்சாலையிலுள்ள 7 கைதிகளும் நேற்றிரவு தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகள் 9 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு கட்டம் கட்டமாக பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளில் யாருக்கும் தொற்று உறுதிசெய்யப்படவில்லை.
இந்த நிலையில், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 2,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
\