பேஸ்புக் கடத்தல் சம்பவம் : சிற்றுந்து உரிமையாளர் உள்ளிட்ட மூவர் கைது
கண்டி, பலகொல்ல பிரதேசத்தில் இருவரை கடத்திச் சென்று கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவத்தில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சிற்றுந்தின் உரிமையாளரும் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பேஸ்புக் ஊடாக நபரொருவருக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்ட விடயம் தொடர்பில் கடந்த 25 ஆம் திகதி இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தேடி காவல்துறை தீவிர விசாரணைகளை முன்னெடுத்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.