நாட்டில் இதுவரை 2,500,000க்கும் மேற்பட்டோருக்கு கொவிட் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
நாட்டில் 2,573,817 பேருக்கு இதுவரையில் கொவிட்-19 முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன் 880,143 பேருக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை 1,533,780 பேருக்கு, சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 492,850 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் 925,242 பேருக்கு கொவிஷீல்ட் முதலாம் தடுப்பூசியும், 372,868 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
ஸ்புட்னிக்-வி முதலாம் தடுப்பூசி 114,795 பேருக்கும், இரண்டாம் தடுப்பூசி 14,425 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.