தெஹிவளை மிருககாட்சிசாலையில் வேறு எந்த மிருகங்களுக்கும் கொவிட் தொற்று உறுதியாகவில்லை

தெஹிவளை மிருககாட்சிசாலையில் வேறு எந்த மிருகங்களுக்கும் கொவிட் தொற்று உறுதியாகவில்லை

தெஹிவளை மிருககாட்சிசாலையில் வேறு எந்த மிருகங்களுக்கும் கொவிட்-19 தொற்று உறுதியாகவில்லை என வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்றுக்குள்ளான தோர் என்ற சிங்கம் மற்றும் சீனா என்றழைக்கப்படும் பெண் சிங்கம் தற்போது குணமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சிங்கத்திற்கு மேற்கொண்ட எக்ஸ்-கதிர் பரிசோதனையின்போது அதன் நெஞ்சு பகுதியில் சளி காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் மிருகங்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம்.
இதற்கான உரிய நடவடிக்கைகளை மிருககாட்சிசாலை திணைக்களம் மேற்கொண்டு வருவதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.