253 மரண தண்டனை கைதிகளுக்கு நிவாரணம்?

253 மரண தண்டனை கைதிகளுக்கு நிவாரணம்?

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் 253 பேரின் தண்டனையை குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் இன்று தெரிவித்தார்.

அதனுடன் தொடர்புடைய அறிக்கை நீதி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

"நாங்கள் அந்த கோரிக்கையை நீதி அமைச்சருக்கு அனுப்பியுள்ளோம். மரண தண்டனை கைதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளோம்.
சிறையில் அடைக்கப்பட்ட ஒரு கைதியை மீண்டும் சமூகத்தில் ஒன்றிணைக்கும் போது, ​​அவரை சமூகத்திற்காக உழைக்கக்கூடிய ஒரு சிறந்த குடிமகனாக மாற்றுவதே எமது எதிர்ப்பார்ப்பாகும். என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்தார்.