நாட்டில் நேற்று 1,876 பேருக்கு கொவிட் தொற்று!
நாட்டில் நேற்று 1,876 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்களில் 1859 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 17 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை, 249,926 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொவிட் சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 32,444 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 1,843 பேர் நேற்று குணமடைந்ததாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 214,668 ஆக அதிகரித்துள்ளது.