இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

கிழக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலையில் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மின்னல் தாக்குதல் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.