நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - ஜனாதிபதி

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - ஜனாதிபதி

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு தற்சமயம் ஆற்றும் விசேட உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஐக்கியம் குறித்து அச்சம் இல்லை.

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட எவருக்கும் அனுமதி இல்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேநேரம், செப்டம்பர் மாதம் முடிவடைவதற்குள், 30 வயதிற்கு மேற்பட்ட 13 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அடுத்த நான்கு ஆண்டுகளில் 60,000 நகர வீடுகள், 200,000 கிராமிய வீடுகள், 40,000 தோட்ட மற்றும் வாடகை வீடுகளை அமைக்கத்திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.