இருவரின் உயிரிழப்புக்கு காரணமான மத்திய அதிவேக வீதி வாகன விபத்து: மூவர் சரணடைந்தனர்

இருவரின் உயிரிழப்புக்கு காரணமான மத்திய அதிவேக வீதி வாகன விபத்து: மூவர் சரணடைந்தனர்

மத்திய அதிவேக வீதியில் சட்டவிரோதமாக நுழைந்து விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்றிருந்த ஏனைய 3 சந்தேக நபர்களும் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மகிழுந்தில் பயணித்த ஐந்து பேரில் 2 பேர் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற மத்திய அதிவேக வீதியில் நேற்று வதாகட பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்த உந்துருளி மற்றும் மகிழுந்து என்பன மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் மரணித்ததோடு மகிழுந்தில் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.
இதற்கிடையில் மகிழுந்தில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டதோடு அதில் பயணித்தவர்கள் அலவ்வ பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.