கடற்றொழில் அமைச்சின் உதவி பணிப்பாளர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பு

கடற்றொழில் அமைச்சின் உதவி பணிப்பாளர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பு

X Press Pearl கப்பலினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நட்டயீடு பெற்றுக் கொடுப்பதற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் பாடுபட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் கொழும்பு மாவட்டத்திற்கான பணிப்பாளர் எச். டி. ரோஹித்த என்சலம் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டு கொத்தாலவல பாதுகாப்பு பல்லைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (24) காலமானதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த காவத்த தெரிவித்துள்ளார்.

X Press Pearl கப்பலினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நட்டயீடு பெற்றுக் கொடுப்பதற்கான தகவல்களை திரட்டும் பணியில் கடந்த சில நாட்களாக எச்.டீ. ரோஹித்த என்சலம் ஈடுபட்டு வந்தார். அவரது குடும்ப அங்ஙகத்தவர்களுக்கோ, நெருங்கிய உறவினர்களுக்கோ அல்லது நண்பரகள் எவருக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டிராத நிலையில், கடற்றொழிலாளர்களுக்கு நட்டயீடு பெற்றுக் கொடுப்பதற்காக கடற்றொழிலாளர்களுடன் நெருங்கி செயற்பட்டு வந்த போதே கொவிட் அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

1986ம் ஆண்டு கடற்றொழில் பரிசோதகராக சேவையில் இணைந்து கொண்ட ரோஹித்த 2008ம் ஆண்டில் உதவி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். திருமலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் உதவி பணிப்பாளராக கடமையாற்றியுள்ள அவர் இறக்கும் போது கொழும்பு மாவட்டத்திற்கான உதவி பணிப்பாளராக கடமையாற்றினார்.

59 வயதான அவர் எதிர்வரும் 2021.07.30ம் திகதி சேவையிலிருந்து ஓய்வு பெறவிருந்த நிலையில் இவ்வாறான அபாயம் மிக்க சூழ்நிலையில் ஓய்வுக்கு முன்னரான விடுமுறையைக் கூட பெற்றுக் கொள்ளாமல் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய ஒரு அதிகாரியாவார்.

அன்னாரது மரணத்ததை யொட்டி அனுதாபம் nதிரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, X Press Pearl கப்பல் தீப்பற்றிக் கொண்டதன் காரணமாக கடற்றொழிலில் ஈடுபட முடியாத கடற்றொழிலாளர்களுக்கு நட்டயீடு பெற்றுக் கொடுப்பதற்காக மிகவும் அர்ப்பணிப்புடன அவர்களது விபரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே அவருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டதாகவும் அவரது மறைவை முன்னிட்டு கடற்றொழில் அமைச்சின் ஊழியர்கள் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் சார்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை அன்னாரின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.