நாட்டில் நேற்று பதிவான கொவிட் தொற்றாளர் விபரம்

நாட்டில் நேற்று பதிவான கொவிட் தொற்றாளர் விபரம்

கம்பஹா மாவட்டத்திலேயே நேற்றைய தினமும் அதிகளவான கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அங்கு நேற்று மாத்திரம் 386 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இதுவரையில் அம் மாவட்டத்தில் மொத்தமாக 45,387 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக 61,049 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், நேற்று மாத்திரம் அங்கு 261 பேருக்கு தொற்று உறுதியானது.

களுத்துறை மாவட்டத்தில் 252 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 97 பேருக்கும், குருணாகலில் 54 பேருக்கும், காலியில் 64 பேருக்கும் நேற்று தொற்று உறுதியானது.

யாழ்ப்பாணத்தில் 60 பேரும், கேகாலையில் 125 பேரும், புத்தளத்தில் 17 பேரும், அனுராதபுரத்தில் 61 பேரும், மாத்தறையில் 16 பேரும், பொலன்னறுவையில் 39 பேரும், அம்பாறையில் 18 பேரும், நுவரெலியாவில் 27 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 97 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், ஹம்பாந்தோட்டையில் 11 பேருக்கும், பதுளையில் 100 பேருக்கும், மட்டக்களப்பில் 133 பேருக்கும், மொனராகலையில் 6 பேருக்கும், கிளிநொச்சியில் 3 பேருக்கும், முல்லைத்தீவில் 4 பேருக்கும் தொற்று உறுதியானது.

அதேநேரம் திருகோணமலையில் 8 பேருக்கும், மாத்தளையில் 13 பேருக்கும் வவுனியாவில் 10 பேருக்கும் மன்னாரில் 55 பேருக்கும் தொற்று உறுதியான அதேநேரம் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 24 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.

Image