இரத்தினபுரி மாவட்டத்தில் சைனோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டோருக்கான அறிவித்தல்!
இரத்தினபுரி மாவட்டத்தில் சைனோபாம் தடுப்பூசியின் முதலாம் செலுத்துகையை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் செலுத்துகை அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு ஒரு இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் முதலாம் செலுத்துகைக்காக வழங்கப்பட்டன.
இரத்தினபுரி மாவட்டத்திற்கு இரண்டாம் செலுத்துகைக்காக அடுத்த வாரம் 50 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன.
இதனையடுத்து இரண்டாம் செலுத்துகை ஆரம்பிக்கப்படும் என சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.