வாவியில் மூழ்கி உயிரிழந்த நபருக்கு கொரோனா!
ஆனமடுவ H 8 கிராமத்தில் அமைந்துள்ள வாவி ஒன்றில் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த நபருடன் நெருங்கிப் பழகிய 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆனமடுவ சுகாதார வைத்தியஅதிகாரி ரவி அபேரத்ன இன்று (24) தெரிவித்தார்.
60 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 22 ஆம் திகதி குறித்த நபர் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள 20 பேருக்கு மேலதிகமாக உயிரிழந்த நபருடன் நெருங்கிப் பழகிய மேலும் 50 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தல் ஆலோசனைகனை மீறி செயற்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர் சமன் அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, அவர்களுக்கு எதிர்வரும் தினத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.