யுவதியை கடத்திச் சென்று நகை, பணத்தை கொள்ளையடித்த நபருக்கு காவல்துறை வலைவீச்சு
காலி,கராப்பிட்டிய வங்கியொன்றுக்கு அருகில் மகிழுந்துடன் இளம் யுவதியொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் காலி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தனது சகோதரியுடன் கராப்பிட்டிய பகுதியிலுள்ள வங்கியொன்றுக்கு சென்றிருந்தபோதே குறித்த யுவதி மகிழுந்துடன் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
யுவதியை கடத்திச் சென்ற சந்தேகநபர், ரத்கம பகுதியில் வைத்து வாகனத்தை நிறுத்தி, அவரை வாகனத்திலிருந்து கீழே இறக்கிவிட்டுள்ளார்.
பின்னர் யுவதியிடமிருந்த சுமார் ஒரு இலட்சம் ரூபா பணத்தையும் அவர் அணிந்திருந்த தங்க நகையையும் கொள்ளையிட்டு குறித்த யுவதியை அவ்விடத்திலேயே இறக்கிவிட்டு சந்தேகநபர் மகிழுந்தை கடத்திச்சென்றுள்ளார்.
இதனையடுத்து 26 வயதான குறித்த யுவதி வீடு திரும்பியதன் பின்னர் இது தொடர்பில் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்பின்னரான விசாரணைகளையடுத்து, பூஸா பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் குறித்த மகிழுந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.