53 கோடி ரூபா ஹெரோயினுடன் கைதான காவல்துறை அதிகாரி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்!

53 கோடி ரூபா ஹெரோயினுடன் கைதான காவல்துறை அதிகாரி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்!

சுமார் 53 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கைதான களுத்துறை தெற்கு காவல்நிலையத்தின் உப காவல்துறை பரிசோதகர் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சந்தேக நபர்கள் இன்று (24)  காலி பிரதம நீதிவான் ஹர்ஷன கெகுனவெல முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 18 ஆம் திகதி மேற்படி உப காவல்துறை பரிசோதகரும், மற்றைய இரு சந்தேகநபர்களும் அதிவேக நெடுஞ்சாலையின் பத்தேகம நுழைவாயிலுக்கு அருகில், 52 கிலோ 728 கிராம் நிறையுடைய ஹெரோயினுடன் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.