நேற்றைய கொவிட் மரணங்கள் - தொற்றாளர்களின் விபரம்

நேற்றைய கொவிட் மரணங்கள் - தொற்றாளர்களின் விபரம்

நாட்டில் நேற்றையதினம் 2,196 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் 2,178 பேர் சிறைச்சாலை கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 18 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.

இதன்படி நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 246,109 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் தொற்றிலிருந்து நேற்று 1,890 பேர் குணமடைந்து சிகிச்சை மையங்களிலிருந்து வெளியேறிதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி கொவிட் தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 211,186 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்  32,219 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

அதேவேளை கடந்த 22 ஆம் திகதி மேலும் 65 கொவிட் மரணங்கள் இடம்பெற்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்டு அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பதிவான மரணங்களுள் 30 வயதுக்கு குறைவான பெண் ஒருவரும், ஆண் ஒருவருமாக 2 பேர் உயிரிழந்தனர்.

30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடையில் 4 பெண்களும், 6 ஆண்களுமாக 10 பேர் மரணித்துள்ளனர்.

அதேநேரம் 60 வயதுக்கு மேற்பட்ட 20 பெண்களும், 33 ஆண்களுமாக 53 பேர் மரணித்ததாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,769 ஆக அதிகரித்துள்ளது.