கோட்டாபய தொடர்பில் மனம் திறந்த மைத்திரி

கோட்டாபய தொடர்பில் மனம் திறந்த மைத்திரி

நாட்டுக்கு வேலை செய்யும் விடயத்தில் எவ்வித பேதமின்றி ஜனாதிபதி கோட்டாயபய ராஜபக்ஷ செயற்பட்டதாலேயே நான் அவருக்கு ஆதரவளிக்கிறேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்நறுவை லங்காபுர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

நாடு ஒன்றை நிர்வகிக்கும் போது பல தடைகளை எதிர்நோக்க நேரிடும். நானும் அப்படியான பல தடைகளை எதிர்நோக்கினேன்.

இதனாலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாட்டைப் பற்றி சிந்தித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்தில் பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.