அசாம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அசாம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 3 வாரங்களாக பெய்து வரும் மழையுடனான காலநிலைக் காரணமாக 12 மாவட்டங்களைச் சேர்ந்த 2 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த வெள்ளத்தின் காரணமாக 27 ஆயிரம் ஹெக்டர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை  மாநில பேரிடர் மீட்புப் படையினர் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வரும் நிலையில்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டு வருவதாக அரசத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.