நிந்தவூர் பகுதியில் வயல்வெளியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

நிந்தவூர் பகுதியில் வயல்வெளியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

அம்பாறை - சம்மாந்துறை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பகுதியில் உள்ள வயல்வெளியில் இருந்து திங்கட்கிழமை மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் நிந்தவூர் பிரதேச சபை கட்டிடத்திற்கு பின்னால் அமைந்துள்ள வயல் காணியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், இறைச்சி கடை சார்ந்த கூலித்தொழிலில் ஈடுபட்டு வரும் 60 வயதான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.