விமானப் படைக்கான ஹெலிகொப்டர் கொள்வனவிற்கு அனுமதி!

விமானப் படைக்கான ஹெலிகொப்டர் கொள்வனவிற்கு அனுமதி!

இலங்கை விமானப் படை விமானிகளின் பயிற்சிக்காக 4 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.