“சத்தியத்திற்காக போராடுபவர்களுக்கு விலை இல்லை இல்லை” : ராகுல் காந்தி

“சத்தியத்திற்காக போராடுபவர்களுக்கு விலை இல்லை இல்லை” : ராகுல் காந்தி

சத்தியத்திற்காக போராடுபவர்களுக்கு  விலை இல்லை இல்லை. அவர்களை மிரட்ட முடியாது என்பதை பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் புரிந்துக்கொள்ள மாட்டார் என  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் குடும்பத்தினருடைய அறக்கட்டளைகள் மீது விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி மேற்படி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், “உலகம் அவரை போன்றது என மோடி நம்புகிறார். ஒவ்வொருவருக்கும் விலை இருப்பதாக அவர் நினைக்கிறார். அப்படி இல்லாத பட்சத்தில் மிரட்டல் மூலம் எண்ணியதை சாதிக்கலாம் என அவர்  நினைக்கிறார்.

ஆனால் சத்தியத்துக்காக போராடுபவர்களுக்கு விலை இல்லை. அவர்களை மிரட்ட முடியாது என்பதை மோடி ஒரு போதும் புரிந்துகொள்ளமாட்டார்” எனத்  தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் ராஜீவ் காந்தி நினைவு அறக்கட்டளை,  இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை,  ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் ஆகிய 3 அமைப்புகளும் பெற்ற நிதி,  நன்கொடை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இதற்காக அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை மத்திய அரசு நியமித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.