அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு தடை

அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு தடை

அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாகனத்தை தனியார் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவது சட்ட விரோதமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேபோன்று வேட்பாளர்களின் பதவிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றமை குறித்து சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.