பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி, அறிவியல், வர்த்தகம், முகாமைத்துவம், கணினி மற்றும் தொழில்நுட்ப பீடங்களின் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியுமென தெரிவித்துள்ளார்.

இந்த பீடங்களில் உள்ள அனைத்து மாணவர்களும் எதிர்வரும் 12ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை விடுதிகளுக்கு சமூகமளிக்க வேண்டுமெனவும் குறித்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலையடுத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.