
அனைத்து மாகாண சபை நிர்வாகத்தின் கீழுள்ள வைத்தியசாலைகளிலும் தொழிற்சங்க நடவடிக்கை!
நாட்டின் அனைத்து மாகாண சபை நிர்வாகத்தின் கீழுள்ள வைத்தியசாலைகளிலும் இன்று (16) காலை 8 மணி முதல் 4 மணிநேர தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை சுகாதார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த குருகே இதனைத் தெரிவித்துள்ளார்.
வைத்தியாலைகளில் பணியாற்றும் கனிஷ்ட பணிக்குழாமினர் மாத்திரம் இதில் பங்கேற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி செலுத்தப்படாமை உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை சுகாதார சேவையாளர் சங்க பிரதான செயலாளர் தெரிவித்துள்ளார்.