மன்னாரில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை!

மன்னாரில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை!

மன்னார் - நானாட்டான் - வங்காலை கடற்கரையில், உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது.

உயிரிழந்த கடலாமையின் ஓடுகள் கடுமையாக சிதைவுற்ற நிலையில் காணப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில், அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.