
கொவிட் தொற்றால் 57 பேர் மரணம்!
இன்றைய தினம் கொவிட் தொற்றால் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்து.
இதற்கமைய கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,260 ஆக அதிகரித்துள்ளது.
நாளாந்த கொவிட் மரணங்களை உடனுக்குடன் அறிவிப்பதற்கான புதிய பொறிமுறை ஒன்று கையாளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
அதன்படி, இன்று (14) முதல் நாளாந்தம் கொரோனா காரணமாக மரணிக்கின்றவர்களின் விபரங்கள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.